இந்தியா

School Leave : டிசம்பர் 8 முதல் 16 வரை.. பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Published

on

School Leave : டிசம்பர் 8 முதல் 16 வரை.. பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

திருவண்ணாமலை அண்ணாமலையர் காரத்திகை தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 04 ஆம் தங்க மர கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி காலை 4 மணிக்கு அண்ணாமலையர் கோவிலின் முன் பரணி தீபமும் அதை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை மகா தீபத்தை பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்களின் வருகையை முன்னிட்டு சென்னை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read :
திமுக மீதான விஜய் விமர்சனம்.. ஒற்றை வரியில் பதில் கொடுத்த உதயநிதி!

Advertisement

திருவண்ணாமலை மகாதீபத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் தங்குவதற்கு திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு வரும் 08 முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version