இந்தியா

“இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்” – சங்கத்தின் தலைவர் அறிவிப்பு

Published

on

“இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்” – சங்கத்தின் தலைவர் அறிவிப்பு

Advertisement

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலைய அருகில் முடிச்சூரில் 42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை தமிழக முதல்வர் 07.12.2024 அன்று திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலும் மற்றும் போரூர் டோல் கேட் அருகிலும் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல் கேட்டில் இருந்து தமிழகத்தின் தென்பதிகளுக்கு இயக்கப்படும்.

மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஈ.சி.ஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்திற்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறோம். இந்த பேருந்து நிலையம் அந்த ஏரியா பயணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் எலக்ட்ரிக் ட்ரெயின் மற்றும் மெட்ரோ ட்ரெயின் கனெக்டிவிட்டி செய்து முடிக்கும் போது பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

Advertisement

மேலும் ஈ.சி.ஆர் சாலை வழியாக பாண்டிச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தமிழகத் தென்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் டோல் ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version