இலங்கை
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்மாத இறுதிக்குள்!
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்மாத இறுதிக்குள்!
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதற்கு ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்பட்டு புதிதாக வேட்பு மனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்தே, மார்ச் மாத்தின் இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதற்காக புதிய வேட்புமனுக்கள் விரைவில் கோரப்படும் என்றும் கூறப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 72 கோடி ரூபா நிதி செலவிடப்பட்ட நிலையிலேயே, அந்தத் தேர்தல் காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டிருந்தது.
இதேவேளை, 341 உள்ளாட்சி சபைகளுக்கு 8 ஆயிரத்து 711 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக ஏற்கனவே கோரப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 80 ஆயிரத்து 672 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ச)