பொழுதுபோக்கு

என்ன டியூன் இது, எனக்கு பிடிக்கல: திருப்தி இல்லாத எம்.ஜி.ஆர்; சோகத்தில் எம்.எஸ்.வி எடுத்த முடிவு!

Published

on

என்ன டியூன் இது, எனக்கு பிடிக்கல: திருப்தி இல்லாத எம்.ஜி.ஆர்; சோகத்தில் எம்.எஸ்.வி எடுத்த முடிவு!

எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த எடிம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு படத்திற்கு பாடலுக்கான டியூனை போட்டபோது அதில் எதுவுமே தனக்கு பிடிக்கவில்லை என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதனால் ஒரு பாடலுக்கு 10-க்கு மேற்பட்ட டியூன்களை போட்டும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவதாக இருந்துள்ளார். நாடக நடிகராக இருந்து திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு, நாயகனாக உயர்ந்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டு வந்த எம்.ஜி.ஆர், 1970-களில் அதிமுக கட்சியை தொடங்கினார். அப்போது உலகம் முழுவதும் சிறந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றார்போல் ஒரு கதை தேவை என்று தேடிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதை கிடைத்துள்ளது, இந்த படத்தை படமாக்க, பல தடைகள் வந்துள்ளது. ஆனாலும் மனம் தளராத எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடத்த வெளிநாடுகளுக்கு செல்ல தயாரானார்.மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க குண்ணக்குடி வைத்திய நாதனை புக் செய்த எம்.ஜி.ஆர் அதன்பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனை கேட்டுள்ளார் எம்.எஸ்.வி இந்த படத்தி்ற்கு இசையமைக்க மறுத்தாலும், பிறகு எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்தி அவரை படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார். அதே சமயம் எம்.எஸ்.வி போட்டி டியூன்கள் அனைத்திற்கும், எம்.ஜி.ஆர் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், தனக்கு பிடிக்காத மாதிரியே நடந்துகொண்டுள்ளார்.இதை பார்த்து விரக்தியான எம்.எஸ்.வி, 10 நாட்களில் 15 பாடல்கள் பதிவு செய்து கொடுத்தவிட்டு, இந்த பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. அதனால் நாம் சம்பளம் வாங்க கூடாது என்று நினைத்துள்ளார். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாரானபோது, விநியோகஸ்தர்களை அழைத்து ஆள் உயர மலையை எம்.எஸ்.விக்கு அணிவித்த எம்.ஜி.ஆர் ஒரு பை நிறைய பணம் கொடுத்துள்ளார். இதை எதிர்பார்க்காத எம்.எஸ்.வி, டியூன் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. இப்போது இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டுள்ளார்.இதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர்,  நீ போட்ட அத்தனை டியூனுமே ப்ரமாதம் விசு. ஆனால் நான் அப்போது நல்லா இருக்கு என்று சொல்லியிருந்தாலும், நீ அத்துடன் விட்டிருப்பாய். ஆனால் இப்போது அதற்கு மேல் முயற்சி செய்து சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறாய் என்று கூறியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்பதை எம்.எஸ்.வி புரிந்துகொண்டார். உலகம் சுற்றும் வாலிபன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version