சினிமா

என் மகள் அனுபவித்த வலி..புரட்டிப்போட்ட கேன்சர்!! கண்ணீருடன் நடிகை கெளதமி..

Published

on

என் மகள் அனுபவித்த வலி..புரட்டிப்போட்ட கேன்சர்!! கண்ணீருடன் நடிகை கெளதமி..

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை கெளதமி. முதல் கணவரை விவாகரத்து செய்து மகள் இருக்கும் நிலையில், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.அதன்பின் கமல் ஹாசன் ஆதரவால் கேன்சரில் இருந்து மீண்டு வந்து, கமல் ஹாசனுடன் 13 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அதன்பின் 13 ஆண்டுகால வாழ்க்கையில் இருந்து கமலை பிரிந்து தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தனியாக இருந்தபோது என் மகளுக்கு என்னைவிட்டால் யாரும் இல்லை என்று புரிந்து, நான் நன்றாக இருக்க வெண்டும் என நினைப்பேன்.அப்போதுதான் ஒருநாள் எனக்கு கேன்சர் இருக்கலாமென்ற சந்தேகம் வந்து, என்னை சுயபரிசோதனை செய்தபோது எனக்கு கட்டி இருப்பது தெரிந்தது.பின் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை எடுக்க துவங்கி, என் வாழ்க்கை மோசமானதாக இருந்தாலும் என் மகளுக்காக நான் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வாழ்க்கையில் நம்முடன் யார் இருக்கிறார்கள், யார் போகிறார்கல் என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்லை.அந்நேரத்தில் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரேவொரு விஷயம் என் மகள் நான் இல்லை என்றால் என் மகளுக்கு வேறுயாரும் இல்லை என்பது எனக்கு தெரிந்ததால் கேன்சரை எதிர்த்து போராடினேன். அப்போது என் மகளுக்கு ஒவ்வொரு விஷயத்தை சொல்லிசொல்லி வளர்த்து, அம்மாவிற்கு ஒரு கட்டி வந்திருக்கிறது.அது கேன்சர், சிகிச்சை எடுக்க போகிறேன், ஆபிரேஷன் செய்ய வேண்டும் நான் இதிலிருந்து மீண்டும் வரலாம் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒவ்வொன்னையும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.இந்நேரத்தில் என் மகள் அனுபவித்த வலி சொல்லமுடியாதவை, சிறுவயதில் இருந்து என் மகள் சந்தித்த பிரச்சனைகளால், அவள் என்னைவிட தைரியசாலியாகவே இருக்கிறாள். நான் அதை பலமுறை உணர்ந்து இருக்கிறேன் என்று கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார் நடிகை கெளதமி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version