உலகம்

ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டின் பிரோகோவா என்ற கிராமத்தில் இரண்டு மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர் .

இந்த விபத்தில், 28 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மினி பஸ்கள் மோதியதை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 26 பேரில் 10 பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுவது பொதுவானது என்றும் ஆண்டுதோறும் 1,000 பேர் உயிரிழப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு ஐவரி கோஸ்ட்டில் பஸ் மீது டேங்கர் லாரி மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version