இந்தியா

கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விசா மறுப்பு; மேற்கு வங்க இலக்கிய விழாவில் பங்கேற்காத பங்களாதேஷ்

Published

on

கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விசா மறுப்பு; மேற்கு வங்க இலக்கிய விழாவில் பங்கேற்காத பங்களாதேஷ்

மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பங்களாதேஷ் பவனில் இரண்டு நாள் வங்கமொழி இலக்கிய விழாவில் இந்த ஆண்டு பங்களாதேஷில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இந்தியாவிற்கும் அண்டை நாட்டிற்கும் இடையே அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷில் இருந்து பல கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு விசா மறுக்கப்பட்டதை அடுத்து இது நடந்தது.ஆங்கிலத்தில் படிக்க: No Bangladesh participation in literary festival in West Bengal after poets, writers denied visaநிகழ்ச்சி அமைப்பாளர் கோவாய் சாகித்ய சமிதியின் வட்டாரங்கள் கூறுகையில், சனிக்கிழமை தொடங்கிய விழாவில் பங்காளதேஷைச் சேர்ந்த 20 கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொள்ள விரும்பினர்.கோவாய் சாகித்ய பத்ரிகாவின் செயலாளரும், விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான கிஷோர் பட்டாச்சார்யா, “அவர்களில் சிலர் விசா பெற முயன்றனர், ஆனால் அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டது, அதன் பிறகு, மீதமுள்ளவர்களும் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.” என்று கூறினார்.பட்டாச்சார்யா கூறுகையில், “வங்காளதேஷ் பவன் மற்றும் கோவாய் சாகித்ய சமஸ்கிருதியின் கூட்டு முயற்சியாக இரண்டு நாள் சர்வதேச கலந்துரையாடல் கூட்டம் மற்றும் ஹ்ரிடோய் மிலன் விழாவை நாங்கள் ஏற்பாடு செய்தோம். இந்த முறை, எங்கள் பங்களாதேஷ் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தவறிவிட்டனர். அவர்களது நாட்டில் சமீபகாலமாக பதற்றம் நிலவியதால் நாங்கள் அவர்களை இங்கு வரவிடாமல் தடுத்துள்ளோம். இந்த கொந்தளிப்பிலும் நிலையற்ற சூழ்நிலையிலும், விவாதித்து இலக்கியம் படைக்க முடியாது என்பதை நாம் அறிவோம். இருப்பினும், அவர்கள் வருந்துகிறார்கள், நாங்களும் வருத்தப்படுகிறோம்.” என்று கூறினார்.இந்த ஆண்டு, கோவாய் சாகித்ய சமிதி பங்களாதேஷ் பவனுடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்தது. விஸ்வபாரதியில் அமைந்துள்ள பங்களாதேஷ் பவன், ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. பங்களாதேஷ் பவன் தலைவர் மனபேந்திர முகர்ஜி கூறுகையில், “இந்த விழா அடிப்படையில் வங்க கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை உயர்த்துவதற்காகும். பங்களாதேஷின் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்காமல் இது சாத்தியமில்லை” என்றார்.குஜராத், அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மும்பை போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 வங்க மொழிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வினய் குமார் சோரன் உட்பட விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பங்களாதேஷில் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல், வேலையில் இடஒதுக்கீடு கோரி பெரிய அளவ்ல் மாணவர் இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதில் இருந்து, அங்கு அரசியல் சூழல் பதட்டமாக உள்ளது. அப்போதிருந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இந்த காலகட்டத்தில், சிட்டகாங் மற்றும் ரங்பூர் போன்ற பகுதிகளில் சிறுபான்மை குழுக்கள் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன, இது இந்தியாவில் அமைதியின்மை மற்றும் கவலையை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version