இலங்கை

சஜித்தின் ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா தொடர்பில் அம்பலமான உண்மை

Published

on

சஜித்தின் ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா தொடர்பில் அம்பலமான உண்மை

2024ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கூடப்பட்டு முதல் நாள் அமர்வுக்கு முன்னர் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது இல்லையென்று ஒரு சில தரப்புகள் கூறியதால் அன்றையதினம் சிறிய சலசலப்பொன்று ஏற்பட்டது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதும், பிரதமர், எதிர்கட்சி தலைவர் யாரென்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான ஆசனம் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்து கொள்வது தான் மரபு என முன்னாள் நாடாளுமன்ற ஊடகவியலாளர் எஸ்.மகாலிங்கசிவம் தெரிவித்துள்ளார்.

Advertisement

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முதல் நாள் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தது அவரின் அறியாமையாக இருக்கலாம்.

Advertisement

எனினும், அங்குள்ள படைகல சேவகரால் கூறப்பட்ட போதும் அதனை ஏற்காது அவர் செயற்பட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் இந்த காணொளி வாயிலாக காணலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version