இலங்கை
திருகோணமலை கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
திருகோணமலை கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
திருக்கோணமலை புளியங்குளம் முகாமடி கடற்கரையில் அடையாளம் தெரியாத சிதைவடைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கறையிலே இன்று ( 08) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பல் மேலும் தெரியவருகையில்,
மீன் பிடிக்கு கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைவடைந்துள்ள நிலையில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.