இந்தியா

திருவள்ளுவருடன் செல்பி எடுங்க…. நம்பமுடியாத பரிசை வெல்லுங்கள்..!!

Published

on

திருவள்ளுவருடன் செல்பி எடுங்க…. நம்பமுடியாத பரிசை வெல்லுங்கள்..!!

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

Advertisement

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில்திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். இதில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, குறும்படம் போட்டி, செல்பி போட்டிஆகியவை நடைபெற உள்ளது.

பிரிவு-1 : 6 வயது வரையிலானவர்களுக்கு ஒரு அதிகாரம்
பிரிவு-2 : 7 முதல் 10 வயது வரையிலானவர்களுக்கு 3 அதிகாரங்கள்
பிரிவு-3 : 8 முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு 5 அதிகாரங்கள்
மூன்று பிரிவினரும் திருக்குறளை ஒப்புவித்து அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

1. கற்றலின் மேன்மைக் குறித்து திருக்குறள்
2. அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு
இரு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளை தட்டச்சுச் செய்து PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.

Advertisement

பிரிவு-1 : அனைத்துப் பிரிவினர் திருக்குறளில், ஏதேனும் ஒரு குறளைக் கருப்பொருளாக கொண்டு(content) ஓவியங்கள் அமைய வேண்டும். அல்லது திருக்குறளின் நன்மைகள் குறித்து ஓவியங்கள் அமையலாம்.
பிரிவு- 2 : 1ம் வகுப்பு முதல் 5 வரையிலானவர்கள் திருவள்ளுவர் படத்தை ஓவியமாக தீட்ட வேண்டும். இரு பிரிவினரும் வரைந்த ஓவியங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்ப வேண்டும்.

திருக்குறளை மையமாகக் கொண்டு 3 நிமிடங்களுக்குள் அமைய வேண்டும். படைப்புகளை mp4 format ல் அனுப்ப வேண்டும்.

Advertisement

திருக்குறளின் சிறப்புக் குறித்து கவிதைகள் படைக்க வேண்டும். கவிதைகள் 16 வரிக்குள் அமைய வேண்டும்.

அனைத்து வயதினர் கலந்து கொள்ளலாம். தங்கள் பகுதியில் பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலை, அல்லது திருக்குறள் எழுத்தப்பட்ட இடங்களின் முன்பு நின்று செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை 18.12.2024-க்குள் வீடியோ, ஆடியோ, போட்டோ, doc, மற்றும் pdf வடிவில் ஈமெயில் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version