இந்தியா

பள்ளியை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: புதுச்சேரி அரசுக்கு எதிராக போராட்டம்

Published

on

பள்ளியை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: புதுச்சேரி அரசுக்கு எதிராக போராட்டம்

புதுச்சேரியில் அரசு பள்ளியை இடிக்க கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 80 ஆண்டுகளாக அப்பகுதியில் இயங்கி வருகிறது. தற்போது, ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரு வகுப்புகள் மட்டுமே இங்கு நடத்தப்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 15 மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று பள்ளியில் இருந்த மாணவர்களை அருகே இருக்கும் மனவெளி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்குமாறு அதிகாரிகள் கூறியதாகவும், மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்கு சீல் வைத்ததாகவும் தெரிகிறது.இதைக் கண்டித்து சின்ன வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளி, அதே இடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், பள்ளியை இடித்துவிட்டு மதுபான கடை கட்டுவதற்கு ஏற்பாடு நடப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version