இலங்கை

வலுப்பெறும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : மழைக்கு வாய்ப்பு!

Published

on

வலுப்பெறும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இது டிசம்பர் 11 ஆம் திகதி இலங்கை-தமிழ்நாடு கரையோரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

 இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதன் காரணமாக இன்று (08) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல கால மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version