இலங்கை

வவுனியாவில் திடீர் சோதனை நடவடிக்கை… பலருக்கு நேர்ந்த கதி!

Published

on

வவுனியாவில் திடீர் சோதனை நடவடிக்கை… பலருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வடக்கில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

Advertisement

இதனையடுத்து, வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்றையதினம் (08-12-2024) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ரயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என பல இடங்களில் காணப்பட்டதுடன், அவற்றில் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.

அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement

இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தமது அயல் பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version