சினிமா

2024ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற நடிகை யார் தெரியுமா? அட இந்த நடிகையா!!

Published

on

2024ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற நடிகை யார் தெரியுமா? அட இந்த நடிகையா!!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் புது வரவு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் கூட, மவுசு என்னவோ பழைய நடிகைகளுக்குத் தான் அதிகம் உள்ளது. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வரும் அந்த டாப் நடிகைகளுக்கு மார்க்கெட்டில் அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்பட்டாலும் கூட, மீண்டும் கம்பேக் கொடுத்து வருகின்றனர். அப்படி தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு இந்த நடிகை பேவரைட் என்று கூறலாம்.

Advertisement

2024ம் ஆண்டு கடைசியில் இருக்கிறோம். இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம் என இந்த ஆண்டு  நடந்த அனைத்திலும் சிறந்தது இதுதான், இவர்கள்தான் என்ற கணிப்பு வெளியாகும். அந்த வகையில், 2024ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்மிகா, மீனாட்சி சவ்த்ரி, நயன்தாரா இவர்களா என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இவர்கள் யாரும் இல்லை. இன்றும் மங்காத இளமையுடன், அசத்தலான நடிப்பு, கவர்ந்திழுக்கும் பேரழகுடன் வருசையாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை திரிஷா தான் அந்த நடிகை.

நடிக்க அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளில் வாய்ப்பை இழக்கும் நடிகைகளுக்கு நடுவே அறிமுகம் ஆகி 20 ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதன்முதலில் நாயகியாக திரிஷா அறிமுகமானார்.

Advertisement

தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நாயகியாக கடந்த ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திரிஷா. சில ஆண்டுகளுக்கு முன் இவரது மார்க்கெட் சரிந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது, ஆனால் 96 படத்தின் மூலம் அதிரடி கம்பேக்கை கொடுத்தார். அதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த திரிஷாவின் காட்டில் மழை தான்.

லியோ, தி கோட் படத்தில் குத்தாட்டம் என புள் எனெர்ஜியுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாகி நடித்து வரும் திரிஷா, அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் ‘தக் லைப்’ படத்திலும் திரிஷா நடித்துள்ளார்.

Advertisement

‘தக் லைப்’ படத்தில் நடிக்க திரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திரிஷா உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version