இந்தியா

6 நாட்களாக நடுக்கடலில் தத்தளிக்கும் எருமை மாடு.. மீட்க போராடும் உரிமையாளர்..!

Published

on

6 நாட்களாக நடுக்கடலில் தத்தளிக்கும் எருமை மாடு.. மீட்க போராடும் உரிமையாளர்..!

Advertisement

கடலூரில் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளி கடற்கரை அருகே முகத்துவார பகுதியில் இருந்த 32 எருமை மாடுகள் ககடலில் அடித்துச் செல்லப்பட்டன.

32 எருமை மாடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டு 6 நாட்கள் கடந்த நிலையிலும் அவற்றின் நிலை என்னவென்று தெரியாத சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் தற்போது அதில் ஒரு எருமை மாடு உயிருடன் கடலில் தத்தளித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement

#JUSTIN கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட 32 மாடுகளில் நடுகடலில் உயிருக்குப் போராடும் ஒரு மாடு #Cuddalore #Cow #Ocean #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/G0Uw4lg7yO

தாழங்குடா பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றபோது நடுக்கடலில் தத்தளித்த ஒரு எருமை மாட்டை பார்த்துள்ளனர்.

எருமை மாட்டை மீட்டால் படகு கவிழ்ந்து விடும் என அஞ்சிய மீனவர்கள் மாட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version