இந்தியா
Bengaluru: அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டல்.. இளம்பெண்ணிடம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!
Bengaluru: அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டல்.. இளம்பெண்ணிடம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!
பெங்களூருவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் காலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மோகன்குமார் என்ற இளைஞர் ரூ.2.5 கோடி மோசடி செய்துள்ளார். மேலும், காதலிக்கும்போது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோவை காட்டி இளைஞர் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இளம்பெண்ணை மிரட்டி நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் உயர் ரக கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். பல மாதங்களாக மோகன்குமார் தொடர்ந்து மிரட்டி வந்ததை தொடர்ந்தது, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காதலன் மோகன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது 20 வயதாகும் அந்த பெண், உறைவிடப் பள்ளியில் படிக்கும்போது மோகன்குமாரை சந்தித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இருவரும் காதலித்ததாகவும், மோகன்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும்போது, எடுக்கப்பட்ட வீடியோக்களை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.1.25 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பின்னரும் அந்த பெண்ணை மிரட்டி மொத்தம் ரூ.1.32 கோடி பணத்தை இளைஞர் மோகன்குமார் பெற்றுள்ளார்.
அதேபோல், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றையும் அந்த இளைஞர் மிரட்டி வாங்கியதாக கூறிய போலீசார், இதை தொடர்ந்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மோகன்குமாரை கைது செய்ததாக கூறினர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில், இது நன்கு திட்டமிடப்பட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்ட மோகன்குமார் சுமார் ரூ.2.5 கோடி மிரட்டி பணம் பறித்ததாகவும், அதில் ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.