விளையாட்டு

IND vs Ban: 9-வது முறையாக ஆசிய கோப்பையை முத்தமிடுமா இந்தியா? ஜூனியர் வங்கதே சத்துடன் இன்று மோதல்

Published

on

IND vs Ban: 9-வது முறையாக ஆசிய கோப்பையை முத்தமிடுமா இந்தியா? ஜூனியர் வங்கதே சத்துடன் இன்று மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் களமாடிய நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை, வங்கதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வங்கதேசம். 2-வது அரையிறுதியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து இந்தியா அணி  இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்த நிலையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு துபாயில் தொடங்கி நடைபெறுகிறது. 10 மணிக்கு டாஸ் போடப்படும். நடப்பு  சாம்பியனான இந்திய அணி 9-வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வசப்படுத்தும் நோக்கில் களமாடும். இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற 2 லீக் போட்டி, அரையிறுதி என தொடர் வெற்றியை ருசித்தது. எனவே, இறுதிப் போட்டியையும் வெற்றியுடன் முடிக்க நினைப்பார்கள். இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஆயுஷ் மத்ரே மற்றும் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி தரமான  ஃபார்மில் உள்ளனர். அவர்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் முறையே 175 மற்றும் 167 ரன்களை எடுத்துள்ளனர். வங்கதேச அணியைப் பொறுத்தவரை, அவர்களின் பந்துவீச்சு தாக்குதல்தான் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. அந்த அணியின் முகமது அல் ஃபஹாத் தற்போது 10 விக்கெட்டுகளுடன் விக்கெட் வீழ்த்தியவர்களின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளார். முகமது இக்பால் ஹசன் எமோன் அதே எண்ணிக்கையிலான விக்கெட்களை வீழ்த்தி பேட்ஸ்மேன்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே, இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல்  பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணி வீரர்கள் பட்டியல்: இந்திய யு19 அணி: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆண்ட்ரே சித்தார்த் சி, முகமது அமான் (கேப்டன்), கேபி கார்த்திகேயா, நிகில் குமார், ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), கிரண் சோர்மலே, ஹர்திக் ராஜ், சேத்தன் சர்மா, யுதாஜித் குஹா, அனுராக் கவாடே, சமர்த் நாகராஜ், முகமது எனான், பிரணவ் பந்த்.வங்கதேச யு19 அணி: ஜவாத் அப்ரார், கலாம் சித்திகி அலீன், எம்டி அஜிசுல் ஹக்கிம் தமீம் (கேப்டன்), முகமது ஷிஹாப் ஜேம்ஸ், எம்டி ஃபரித் ஹசன் ஃபைசல் (விக்கெட்  கீப்பர்), தேபாசிஷ் சர்க்கார் தேபா, எம்டி ரஃபி உஸ்ஸாமான் ரஃபி, எம்டி சமியுன் பாசிர் ரதுல், அல்ஃபஹ் மரிதா , இக்பால் ஹொசைன் எமன், எம்.டி ரிசான் ஹொசான், அஷ்ரஃபுஸ்ஸாமான் பொரென்னோ, எம்.டி.ரிபாத் பெக், சாத் இஸ்லாம் ரஸின்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version