இந்தியா
அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 மாதம் அவகாசம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 மாதம் அவகாசம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கடந்த 1985 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த மேற்குவங்கத்தை சேர்ந்த பாசு தேவ் தத்தா என்பவர் ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, அவர் இந்தியரே இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, தீர்ப்பாயம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் பாசு தேவ் தத்தா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும் மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதத்திற்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.
அரசுப்பணியில் சேர்ந்தவரின் பின்னணியை சரிபார்த்த பிறகு தான், அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. இம்மனு தொடர்பாக, மேற்குவங்க அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.