இந்தியா
ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை.. விஜய்யால் திருமாவளவனுக்கு வந்த நெருக்கடி
ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை.. விஜய்யால் திருமாவளவனுக்கு வந்த நெருக்கடி
அரசியலுக்கு வந்த பிறகு பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய முதல் மாநில மாநாடு இப்போது வரை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
அதை அடுத்து சமீபத்தில் அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய அரசியல் எதிரியான திமுக கட்சியை பற்றி அவர் பேசியிருந்தார்.
அதை ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் அந்த மேடையில் வைத்த கருத்தும் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் ஆளும் கட்சிக்கு எதிராக தன்னுடைய கருத்தை கூறினார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில் திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதை தான் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் ஆதவை நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னது நான்தான் என கூறியிருந்தார். இருப்பினும் இந்த விவகாரம் இத்தோடு முடியாது.
நிச்சயம் ஒரு பெரிய அணுகுண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அரசியல் வட்டாரத்தில் ஆதவ் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என பேசப்பட்டது.
அதன்படி தற்போது ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் ஆதவ் கடந்த சில மாதங்களாக கட்சியின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் படி நடந்து கொள்கிறார்.
அதனால் தற்போது கட்சியின் சார்பில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இன்னும் சிலர் ஆளும் கட்சியை எதிர்த்தால் எங்களுக்கும் இந்த நிலைமை தானா.. கூட்டணியாக இருந்தாலும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் விஜய் தற்போது ஒவ்வொருவரின் சாயத்தையும் வெளுத்து வருகிறார். அதன் படி அம்பேத்கர் விழாவில் அவர் செய்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது என TVK தொண்டர்கள் கூறுகின்றனர்.