சினிமா

என் பொண்டாட்டி வேலைக்காரியா? உன்ட மனைவி பத்தி பேசவா? ஆவேசத்தில் பாலா

Published

on

என் பொண்டாட்டி வேலைக்காரியா? உன்ட மனைவி பத்தி பேசவா? ஆவேசத்தில் பாலா

சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆன நடிகர் பாலா சமீபத்தில் தான் கோகிலா என்ற தனது சொந்தக்கார பெண்ணை திருமணம் செய்தார். இவருக்கு இது மூன்றாவது திருமணமாக காணப்பட்டது. அப்போதே அவர் பல சர்ச்சைகளில் சிக்கிய போதும் தனது மூன்றாவது மனைவி மீது நம்பிக்கை வைத்து பேசி இருந்தார்.இந்த நிலையில், நடிகர் பாலாவைப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள் கோகிலா குறித்து பேசியதால் உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை தந்தது என தனது இன்ஸ்டா  பக்கத்தில் பத்திரிகையாளர்களை விளாசி உள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.d_i_aஅதன்படி அவர் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே வருத்தத்தில் இருக்கின்றோம். நீங்கள் எப்படி அடுத்தவர்களின் மனைவியை தவறாக பேசலாம். அவர் எனது மனைவி. அவரை வேலைக்காரி என்றும் வேலைக்காரியின் மகள் என்றும் எழுதி உள்ளீர்கள். இதுதான் மீடியாவின் தர்மமா? என் மனைவியை வேலைக்காரி என்று சொல்லும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது? உங்களுடைய மனைவி பற்றி நான் பேசட்டுமா?படம் வெளியிடுவதைப் பற்றி பேசுங்கள். நடிப்பை பற்றி பேசுங்கள். சினிமா பற்றி பேசுங்க. ஆனா எனது மனைவி பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது. எனது மனைவியின் தந்தை பிரபலமான அரசியல் பிரமுகர். இது தொடர்பில் நான் போலீசில் புகார் அளிக்க சென்றபோதும் அவர் என்னை தடுத்துவிட்டார்.நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை. அதனால் தான் தப்பாக எழுதுகின்றார்கள். இந்த செய்தியை எழுதியவர் நிச்சயமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் சும்மா இருக்க மாட்டேன் என பாலா கொந்தளித்து பேசியுள்ளார் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version