தொழில்நுட்பம்
ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட், ஆப் முற்றிலும் முடக்கம்; டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு
ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட், ஆப் முற்றிலும் முடக்கம்; டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் செயலியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்திய ரயில்வே பயணிகள் இன்று (டிச.9) ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஸ்டேட்டஸ் டிராக்கிங் டூல் டவுன்டெக்டரின் படி, பயனர்கள் ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட், ஆப் இரண்டை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, சுமார் 50% பயனர்களால் இணையத்தை பயன்படுத்த முடியவில்லை, அதே நேரம் ஆப் பயனர்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.இன்று காலை 10 மணியளவில் பயனர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். லாக் கின் செய்ய முடியாமலும், ரயில்களை தேடுவது, பணம் செலுத்துவதிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.இதன் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இணையதளம் அடுத்த 1 மணி நேரம் செயல்படாது என்றும் டிக்கெட் ரத்து மற்றும் பிற விவரங்களுக்கு 4646, 0755-6610661 & 0755-4090600 இந்த எண் அல்லது இ-மெயில் etickets@irctc.co.in-ஐ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.