இலங்கை

கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

Published

on

கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அகில  இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பயணித்த ஜீப்வண்டி மோதியதில்  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது கொழும்பு – புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் வைத்து நேற்று(08.12.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

மேலும் இந்த விபத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version