இலங்கை

கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றுக்குள் இருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Published

on

கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றுக்குள் இருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த போது சடலம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.

Advertisement

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version