சினிமா
சூர்யா-45ல் இருந்து விலகினார் இசை புயல்! இளம் இசையமைப்பாளருக்கு போகும் அந்த வாய்ப்பு!
சூர்யா-45ல் இருந்து விலகினார் இசை புயல்! இளம் இசையமைப்பாளருக்கு போகும் அந்த வாய்ப்பு!
கங்குவா திரை படத்திற்கு பிறகு சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் சூர்யா-45 தான். இதனை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. படத்தின் இசை இயக்கத்தை முதலில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ரஹ்மான் படத்திலிருந்து விலகியதையடுத்து, வேறு ஒருவர் இசையமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரசிகர்களின் விருப்பமும், இளம் பாடகரும், இசை அமைப்பாளருமான சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இவர் ‘கட்சி சேரா’, ‘ஆசா கூட’ போன்ற பாடல்கள் மூலம் மக்களைக் கவர்ந்தர் சாய் அபியங்கர். இந்நிலையில் இவர் சூர்யா-45ல் இனித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. சாய் அபயங்கரின் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ்’ படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது அவரின் அதிஷ்ட்டம் என்றே சொல்ல வேண்டும்.