இந்தியா
தமிழகத்தின் ‘குட்டி கேரளா’… week end -க்கு ஏற்ற ஸ்பாட்.. மறக்காம விசிட் பண்ணுங்க..!!
தமிழகத்தின் ‘குட்டி கேரளா’… week end -க்கு ஏற்ற ஸ்பாட்.. மறக்காம விசிட் பண்ணுங்க..!!
வார விடுமுறையை கொண்டாட ‘குட்டி கேரளா’ -வில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி, மேட்டூர் அணை, குருவம்பட்டி உயிரியல் பூங்கா என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதனை விடவும் ரம்யமான இயற்கைச் சூழலை கொண்ட ‘குட்டி கேரளா’ என்று அழைக்கப்படும் பூலாம்பட்டி சுற்றுலாத் தளம். சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூலாம்பட்டி ஆறு சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறையை கொண்டாட வாரம்தோறும் வருகை புரிகின்றனர்.
இந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையானா நேற்றும் ஏராளமானோர் தங்களின் குடும்பத்தினரோடும், அவரவர் நண்பர்களோடும் வருகை புரிந்து, பூலாம்பட்டி ஆற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இங்கு படகு சவாரி செய்ய நபருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் படகு சவாரி செய்யும் பொழுது சுற்றியும் உள்ள ரம்யமான மலைக்குன்று நிறைந்த இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. இங்கு முதல்முறை வருபவர்களுக்கு, பலமுறை வர வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது. இதனினும் மேலாக இங்கே காவிரி ஆற்றில் பிரஷ்ஷாக கிடைக்கும் மீன் வகைகளை சுவைக்கின்றனர். இங்கே சுற்றுலா வருபவர்களுக்கு சிறந்த ஒரு அனுபவமாக இருக்கிறது.
இதுகுறித்துசுற்றுலாப் பயணிகள் கூறியதாவது; ” நாங்கள் இங்கு முதல் முறையாக வருகிறோம். நாங்களும் ஏற்காடு, கொடைக்கானல் என எல்லா சுற்றுலா தலங்களுக்கும் சென்று இருக்கிறோம். ஆனாலும் இங்கே நிலவும் சிதோஷண நிலையும், ரம்யமான இயற்கை சூழலும் எங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பூலாம்பட்டியில் காவேரி ஆறு கரை புரண்டு ஓடுவதால் இந்த சுற்றுலா தளத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு.
இந்த காவிரி ஆற்றில் படகு சவாரி செய்த பொழுது, சுற்றியும் மலைக்குன்றுகள் நிறைந்த அழகிய ரம்யமான காட்சிகள் அனைவரையும் மகிழ்வித்தது. எனவே வார விடுமுறை என்பதால் நாங்கள் குடும்பத்தினரோடு இங்கு வந்தோம். எங்களை விட எங்க குழந்தைகளும் மகிழ்ச்சியோடு பூலாம்பட்டி சுற்றுலா தளத்தை ரசிகர்கள். மறுபடியும் வரவேண்டும் என்று தோன்றுகிறது” என்றனர் சுற்றுலா பயணிகள்.