சினிமா
திருவண்ணாமலை நிலச்சரிவு! ”ஓ மை காட்.. எப்போ? ” என கேட்ட ரஜனிகாந்த்..!
திருவண்ணாமலை நிலச்சரிவு! ”ஓ மை காட்.. எப்போ? ” என கேட்ட ரஜனிகாந்த்..!
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் இறுதியாக வேட்டையன் திரைப்படம் ரிலீசானது. அதன் பிறகு இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடிக்கிறார் என்பது குறித்து செய்திகளும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து நடிகர் ராஜனிகாந்த்திடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். தமிழகத்தில் பெங்கல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தீபமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூலி படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்ல நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் திருவண்ணாமலை நிலச்சரிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எப்போது நடந்தது? என்று கேட்டு ‘ஓ மை காட்’ என்று வருத்தம் தெரிவித்தார். பின்னர், கூலி மற்றும் அடுத்த படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் இல்லை. கூலிக்கு பிறகுதான் எல்லாம்’ என்று கூறி சென்றுள்ளார்.