பொழுதுபோக்கு

தி.மலை நிலச்சரிவில் 7 பேர் பலியான விவகாரம்: வருத்தம் தெரிவித்த ரஜினி

Published

on

தி.மலை நிலச்சரிவில் 7 பேர் பலியான விவகாரம்: வருத்தம் தெரிவித்த ரஜினி

தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது.திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தீபமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூலி படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்ல நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம்  திருவண்ணாமலை நிலச்சரிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, எப்போது நடந்தது? என்று கேட்டு ‘ஓ மை காட்’ என்று வருத்தம் தெரிவித்தார். பின்னர், கூலி மற்றும் அடுத்த படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் இல்லை. கூலிக்கு பிறகுதான் எல்லாம்’ என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version