இலங்கை
நாளை யாழில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை
நாளை யாழில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை
நாளை (டிசம்பர் 10) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
பிறப்புச் சான்றிதழ் பெறாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.