இலங்கை

நிதியை முறைகேடாக பயன்படுத்திய 720 மில்லியன் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

Published

on

நிதியை முறைகேடாக பயன்படுத்திய 720 மில்லியன் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கவலைகளை எழுப்பியுள்ளார்.

Advertisement

திட்டமிடப்பட்ட தேர்தலை இரத்து செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் முடிவின் விளைவாக ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் 10% அநாவசிய செலவினம் எற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மீது நிதிச் சுமையையும் சுமத்தியது, வரி செலுத்துவோர் நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அறிக்கை கூறியது.

தேர்தல் காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  (ப)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version