இலங்கை

பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் விளக்கம் கோரும் ஜோசப் ஸ்டாலின்

Published

on

பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் விளக்கம் கோரும் ஜோசப் ஸ்டாலின்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுடன் தொடர்புடைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு குறைக்கப்பட்டமை தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள இரண்டு சுற்றறிக்கைகளால் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த கொடுப்பனவு குறைப்பினால் தற்சமயம் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version