வணிகம்

பி.எஃப் பணத்தை இனி ஏ.டி.எம்-ல் பெறலாம்; புதிய சலுகை அறிமுகம்: எப்படி பெறுவது?

Published

on

பி.எஃப் பணத்தை இனி ஏ.டி.எம்-ல் பெறலாம்; புதிய சலுகை அறிமுகம்: எப்படி பெறுவது?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இது அனைத்து சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை இ.பி.எஃப் சேமிப்பிற்கு வழங்க வேண்டும். அதே போல் நிறுவனம் 3.67% ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.  இதற்கு அரசு 8.25%  ஆண்டு வட்டி வழங்குகிறது. இந்நிலையில் அவசர தேவை, மருத்துவ தேவை உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு குறிப்பிட்டத் தொகையை பி.எஃப்-ல் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில்,  வருங்கால வைப்பு நிதி அமைப்பு பணம் பெறும் செயல்முறையை எளிதாக்கி உள்ளது. ஏ.டி.எம் மூலம் பணத்தை எடுக்கலாம். வருங்கால வைப்பு நிதி அமைப்பு பயனர்களுக்கு ஏ.டி.எம் கார்டு போலவே இருக்கும் ஒரு அட்டையை வழங்க உள்ளது. அதன் மூலம் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கலாம். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version