வணிகம்

பி.எம் கிசான் திட்டம்: 19-வது தவணை தேதி எப்போது? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Published

on

பி.எம் கிசான் திட்டம்: 19-வது தவணை தேதி எப்போது? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) என்பது விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டமாகும்.  இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.  இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அந்தவகையில், 19-வது தவணைக்கான பணம் 2025 பிப்ரவரி மாதம் வழங்கப்படும். பிப்ரவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான ரூ.2,000 பணம் ஒவ்வொரு 4 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். திட்டத்தில் சேர்வது எப்படி?1.  www.pmkisan.gov.in என்ற இணையப் பக்கம் செல்லவும். 2. “நியூ ஃபார்மர் ரிஜிஸ்ட்ரேஷன்” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.3. உங்கள் ஆதார் எண், மாநிலம், மாவட்டம் மற்றும் வங்கித் தகவல் போன்ற தேவையான விவரங்களை என்டர் செய்யவும்.4. படிவத்தை சமர்ப்பிக்கவும்.5. இப்போது PM கிசான் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி “சேவ்” பட்டனை கொடுக்கவும். தேவைப்பட்டால் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version