சினிமா
புஷ்பா 2 : யாரும் பார்த்திராத நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்.. என்ன அழகு பாருங்க
புஷ்பா 2 : யாரும் பார்த்திராத நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்.. என்ன அழகு பாருங்க
தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளியானது. அல்லு அர்ஜுன் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தில் ஒரு முக்கிய பங்கை பதித்துள்ளார் ராஷ்மிகா.சுகுமார் இயக்கத்தில் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகாவின் ஆட்டம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியுள்ள ஸ்ரீலீலாவை காட்டிலும் ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில், புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மிகப்பெரிய ஸ்டாராக இருப்பினும் அவருடைய டெடிகேஷன் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் வெளிப்படுகிறது.குறிப்பாக, மிகவும் ஸ்டைலிஷ்ஷான ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 2 படத்தில் ஒரு குடும்பப் பெண்ணாக நடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.