இலங்கை
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேக நபரான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.