சினிமா
வார இறுதியில் வசூல் வேட்டையாடிய புஷ்பா 2.. உலக அளவில் 4வது நாள் மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்
வார இறுதியில் வசூல் வேட்டையாடிய புஷ்பா 2.. உலக அளவில் 4வது நாள் மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்
நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கு கடுமையான எதிர்பார்ப்பு இருந்தது.
அதை தெரிந்து கொண்ட இயக்குனர் இரண்டாம் பாகத்தில் பல மாஸ் காட்சிகள் வைத்திருக்கிறார். அதனாலேயே தற்போது ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்த்து கொண்டாடுகின்றனர்.
தமிழ் ரசிகர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அவருடைய பில்டப் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஃபயர் விட்டு வருகின்றனர்.
அதன்படி முதல் நாளிலேயே உலக அளவில் இப்படம் 290 கோடியை நெருங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளில் 134 கோடியாக இருந்தது.
மூன்றாவது நாளில் 159 கோடியாக இதன் வசூல் உயர்ந்தது. ஆனால் நேற்று ஞாயிறு என்பதால் இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி நான்காவது நாளான நேற்று இதன் வசூல் 204.52 கோடியாகும். இப்படியாக உலக அளவில் புஷ்பா 2 787 கோடி வரை கலெக்ஷன் பார்த்திருக்கிறது.
ஏற்கனவே படம் ஆயிரம் கோடியை தாண்டும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ளது. அதன் படி நான்கு நாளிலேயே இவ்வளவு வசூல் என்றால் நிச்சயம் இது சாத்தியம் தான்.
வாரத்தின் முதல் நாளான இன்றும் படத்திற்கு ஆதரவு இருக்கிறது. அதனால் இந்த வார இறுதியில் புஷ்பா 2 வசூல் ஆயிரம் கோடியை தாண்டி விடும்.