இலங்கை

வெளிநாட்டிற்கு பறந்த பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன!

Published

on

வெளிநாட்டிற்கு பறந்த பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன!

பிரபல அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு அதற்கு மறுதினமே டட்லி சிறிசேன தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

 இந்நிலையில், நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் அரலிய உள்ளிட்ட அரிசி ஆலைகளை கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

 அதன்படி, நுகர்வோர் அதிகாரசபையின் இரு அதிகாரிகள் எனும் ரீதியில் அரிசி ஆலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதிய கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்குவதற்கு அனைத்து ஆலை உரிமையாளர்களும் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version