வணிகம்

ATM-ல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை எடுக்க தவறினால் இதுதான் நடக்கும்.. RBI புதிய திட்டம்..!

Published

on

ATM-ல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை எடுக்க தவறினால் இதுதான் நடக்கும்.. RBI புதிய திட்டம்..!

Advertisement

ஏடிஎம்-ல் சில நேரங்களில் பணம் வர தாமதமாகும். இதனால், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை வெற்றி பெறவில்லை என்று கருதி, சென்றுவிடுகின்றனர். இதேபோல் சிலர், மறதி காரணமாகவும் பணத்தை எடுக்காமல் செல்வதுண்டு.
இதனால் பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து பணத்தை எடுக்காத நிலையில், பணம் மீண்டும் இயந்திரத்துக்குள்ளேயே சென்றுவிடும் வசதி, 2012க்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மோசடி குறித்து தற்போது ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் அதிகரித்து வருவதால், மோசடி நடைபெறக் கூடிய ஏ.டி.எம்-களை அடையாளம் கண்டு, அவற்றில் மட்டும், பணம் திரும்ப இயந்திரத்துக்குள் செல்லும் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் வாடிக்கையாளர் பணத்தை எடுக்க தவறியதாக கருதி, இயந்திரம் பணத்தை மீண்டும் உள்ளே கொண்டு போய்விடும். அதேநேரம் பணத்தை எடுக்காததாக கருதி, பதிவிட்ட மொத்த தொகையையும் வாடிக்கையாளர் கணக்கில் தானாகவே மீண்டும் வரவு வைக்கப்படும். இதன் மூலம், மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

Advertisement

ஏடிஎம் இல் பணம் மீண்டும் உள்ளே செல்லும் வசதி கடந்த 2012ல் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின், ஒரு சில ஏ.டி.எம்.களை குறிவைத்து வேறு விதத்தில் மோசடிகள் நடைபெற்றன. இந்நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏ.டி.எம்-ல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை எடுக்க தவறினால், பணம் தானாகவே இயந்திரத்திற்குள் செல்லும் வகையில், ‘ரீடிராக்ஷன்’ வசதியை மீண்டும் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version