இந்தியா
School Leave | இந்த இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
School Leave | இந்த இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 26-ம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
நீண்ட நாள் விடுமுறைக்குப் பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட உள்ள நிலையில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிகளில் மறுசீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளின் விவரம்.
1. திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.
2. திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
3. மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
4. மரக்காணம் ஒன்றியம் நாரவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
5. மரக்காணம் ஒன்றியம் கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி.
6. மரக்காணம் ஒன்றியம் வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
7. மரக்காணம் ஒன்றியம் கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், பள்ளிகள் சீரமைப்பு பணிகள் காரணமாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் மேற்குறிப்பிட்ட பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.