சினிமா
அஜித்தை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ரஜினி இந்த கேரக்டர் தான்!! பிரபலம் அதிரடி
அஜித்தை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ரஜினி இந்த கேரக்டர் தான்!! பிரபலம் அதிரடி
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் தற்போது வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்தும் ராஜா படத்தில் நடந்தவை குறித்தும் பாலாஜி பகிர்ந்துள்ளார். அதில், “வடிவேல் மற்றும் அஜித் இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.ஆனால் ராஜா படத்தில் இவர்கள் இணைந்து நடித்தபோது வடிவேல் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை “இங்கே வாடா, அங்கே போடா” என்று பலமுறை ஒருமையில் அழைத்துள்ளார்.இதனை கேட்டு ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த அஜித் இயக்குனரிடம் இது குறித்து பேசினார். அப்போது இயக்குனர் வடிவேலை அழைத்து உங்கள் வார்த்தைகள் ஹீரோவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது, இனி இது போன்று பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.இந்த சம்பவத்திற்கு பின், அஜித் அவர் நடிக்கும் படங்களில் வடிவேல் இல்லாமல் பார்த்து கொண்டார்.ஆனால், இந்த குணம் ரஜினிக்கு கிடையாது அந்த காலத்தில் ட்ரெண்டிங்கில் எந்த நடிகர் இருக்கிறார்களோ அவர்களை படத்தில் சேர்த்து கொண்டு நடிப்பார், அதுதான் ரஜினியின் கேரக்டர், ஆனால் அஜித் அது போன்று இல்லை” என்று கூறியுள்ளார்.