இலங்கை
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வர்ததமானி வெளியீடு!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வர்ததமானி வெளியீடு!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்ததமானி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த விற்பனை விலை விவரங்கள் இந்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உள்நாட்டு நாடு அரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்சி சில்லறை விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சம்பா அரிசி கிலோ ஒன்றுக்காக அதிகபட்ச சில்லறை விலை 240 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி கிலோ ஒன்றுக்காக அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ச)