இந்தியா

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் அழைப்பு; அவதூறு மெசேஜ்

Published

on

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் அழைப்பு; அவதூறு மெசேஜ்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு போனில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக ஜனசேனா கட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: Andhra Pradesh Deputy CM Pawan Kalyan receives death threatஜேஎஸ்பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் பதிவின்படி, ஒரு அநாமதேய நபர், துணை முதல்வரை “கொல்லப்போவதாக” மிரட்டினார். அழைப்புகள் தவிர, அந்த நபர் நடிகராக மாறிய அரசியல்வாதியைக் குறிவைத்து இழிவான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாக ஜேஎஸ்பி தெரிவித்துள்ளது.ஜன சேனா கட்சி (ஜே.எஸ்.பி) கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் பதிவில், “அடையாளம் தெரியாத நபர் ஒருவர், துணை முதல்வரை “கொல்லப்போவதாக” மிரட்டினார் என்றும், போனில் மிரட்டியது மட்டுமில்லாமல், அந்த நபர் பவன் கல்யாண் குறித்து இழிவான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாக ஜே.எஸ்.பி தெரிவித்துள்ளது.“துணை முதல்வர் பவன் கல்யாணின் அலுவலக ஊழியர்களுக்கு அகண்டக்குடியில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்தது. அவர் கொல்லப்படுவார் என்று அந்த நபர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், அவதூறான வார்த்தைகளால் எச்சரிக்கை செய்திகளை அனுப்பினார். அலுவலக ஊழியர்கள் இந்த மிரட்டல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை துணை முதல்வர் பவன் கல்யாண் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கொலை மிரட்டல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து துணை முதல்வர் பவன் கல்யாணின் அதிகாரிகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்” என்று ஜே.எஸ்.பி எக்ஸ் பதிவில் கூறியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version