சினிமா

ஆற அமர OTT பக்கம் வந்த தங்கலான்.. 4 மாதமாக நடந்த போராட்டம்!

Published

on

ஆற அமர OTT பக்கம் வந்த தங்கலான்.. 4 மாதமாக நடந்த போராட்டம்!

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் இன்று OTT ரிலீஸ் ஆகி இருக்கிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு தான் டிஜிட்டல் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

Advertisement

பொதுவாக தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் OTT பக்கம் வர நான்கிலிருந்து ஆறு வாரம் ஆகிவிடும். சில நேரங்களில் 10 நாளைக்குள்ளேயே OTT பக்கம் கரை ஒதுங்கும் படங்களும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் எதனால் இவ்வளவு நாள் இழுத்தடித்தது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இந்த படத்தை OTT ரிலீஸ் செய்ய தடுமாறி இருக்கிறார்கள். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் தயாரிப்பு குழுவிற்கும் நிறைய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

Advertisement

ஆரம்ப காலகட்டத்தில் எந்த பேச்சு வார்த்தையும் உடன்பாடு ஆகவில்லை.

இதனால் தான் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரு தரப்பும் சமரசமாகிவிட இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version