இலங்கை
இந்தியாவிலிருந்து இறக்குமதியான அரசி!
இந்தியாவிலிருந்து இறக்குமதியான அரசி!
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து தனியார் துறையினரால் இறக்குமதியான 10,000 மெற்றிக் தொன் அரசி நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அரசாங்கம் முதற்கட்டமாக கொள்வனவு செய்யவுள்ள 5,200 மெற்றிக் தொன் அரிசி, எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையும் எனவும்
இரண்டாம் கட்டமாக மேலும் 20,800 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்
முதலில் நாட்டரிசியே இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்
அதன் பின்னர் தேவைப்படும் போது ஏனைய அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.[ஒ]