இலங்கை
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்… அட்டணை வெளியானது!
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்… அட்டணை வெளியானது!
இலங்கையில் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாளையதினம் ஆரம்பமாகும் லங்கா டி10 சுப்பர் லீக் தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், நுவரெலியா கிங்ஸ், கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் ஆகிய 06 அணிகள் பங்குபற்றவுள்ளன.
இந்நிலையில், குழு Aவில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் நுவரெலியா கிங்ஸ் அணிகளும், குழு Bயில் கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.