பொழுதுபோக்கு

எம்.எஸ்.விக்கு ஷாக் கொடுத்த எம்.ஜி.ஆர்: இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லையே!

Published

on

எம்.எஸ்.விக்கு ஷாக் கொடுத்த எம்.ஜி.ஆர்: இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லையே!

வெளிநாட்டில் இருந்து டேப்ரெக்கார்டரை வாங்கி வந்து எம்.ஜி.ஆரை அசத்த நினைத்த எம்.எஸ்.வி கடைசியில் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை கேட்டு, தனது தவறை உணர்ந்துள்ளார் என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவதாக இருந்துள்ளார். நாடக நடிகராக இருந்து திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு, நாயகனாக உயர்ந்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதன்பிறகு ஒரு சில படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்திருந்தார். ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று அசத்தி இருந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவில் நாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவர் நடிகராக உச்சத்தில் இருந்தது வரை அவரின் பல படங்களுக்கு தனது இசையால் வெற்றிகளை கொடுத்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.எம்.ஜி.ஆர் – எம்.எஸ்.வி இடையே, நெருக்கமான நட்பு இருந்த நிலையில், ஒருமுறை வெளிநாடு சென்ற எம்.எஸ்.வி அங்கிருந்து ஒரு டேப்ரெக்கார்டரை வாங்கி வந்துள்ளார். அதை தனது இசை கலைஞர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். அதில் இருந்து ஒரு பாடல் ப்ளே பண்ணும்போது, அங்கிருந்த அனைவரும் இப்படி ஒரு டெக்ரெக்கார்டரை பார்த்தே இல்லை என்று வியந்துள்ளனர். மேலும் இதில் பாடல் கேட்கும்போது அவ்வளவு இனிமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்த டேப்ரெக்கார்டரை எம்.ஜி.ஆரிடம் காட்ட முடிவு செய்த எம்.ஜி.ஆர், அவர் வந்தவுடன், இப்படி ஒரு டேப்ரெக்கார்டரை வாங்கி வந்துள்ளதாக சொல்லி அதை காட்டுகிறார். அதில் இருந்து பாடலையும் ப்ளே செய்து காட்டியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் சூப்பரா இருக்கு விசு என்று சொல்லிவிட்டு, தனது உதவியாளரை அழைத்து ஒரு டேப்ரெக்கார்டரை கொண்டுவர சொல்லி அதில் இருந்து பாடலை ப்ளே செய்துள்ளார் எம்.ஜி.ஆர், அதில் சற்று இறைச்சல் சத்தத்துடன் கேட்டுள்ளது.இதை கேட்ட எம்.எஸ்.வி என்னணே, நான் வாங்கி வந்த டேப்ரெக்கார்டரில், இதமாக பாடல் கேட்கிறது. நீங்கள் இதில் வைத்து கேட்கிறீர்களே என்று கேட்க, விசு, எனது ரசிகர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை. கூலி தொழிலாளிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இந்த டேக்ரெக்கார்டரில் கூட பாடல் கேட்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் நீ வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்து பாடல் கேட்கிறாய்.என் ரசிகர்களுக்கு பிடிக்கும் பாடலை நான் கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் எதில் கேட்பார்களே அதில் தான் நானும் கேட்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு விருப்பமான பாடலை என்னால் கொடுக்க முடியும். நீ எப்படி இசை அமைத்தாலும், இந்த டேப்ரெக்கார்டரில் போட்டு தான் நான் கேட்டு முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த தகவலை எம்.எஸ்.வியே மயில்சாமியிடம் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version