சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் இடத்தில் ‘நியூ சென்சேஷன்’… ‘சூர்யா 45’ படத்தின் புதிய இசையமைப்பாளர்.. வெளியான அப்டேட்!

Published

on

ஏ.ஆர்.ரஹ்மான் இடத்தில் ‘நியூ சென்சேஷன்’… ‘சூர்யா 45’ படத்தின் புதிய இசையமைப்பாளர்.. வெளியான அப்டேட்!

Advertisement

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. கங்குவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா, தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா45’ படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அண்மையில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இப்படத்துக்கான பூஜை நடத்தப்பட்டு, அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப் பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஏ.ஆர்.ரகுமானும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக, பல நேர்காணலில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால் சூர்யா 45 படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, படத்தின் ஒளிப்பதிவாளரை படக்குழு அறிவித்தபோது, அந்த போஸ்டரில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இடம் பெறவில்லை. ஆனாலும் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வராத நிலையில் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

We’re thrilled to welcome @SaiAbhyankkar, a rising star in the music industry, to #Suriya45.@Suriya_offl @dop_gkvishnu @RJ_Balaji @prabhu_sr pic.twitter.com/O26KvV2uUV

Advertisement

ஏ.ஆர்.ரகுமான் படத்தில் இருந்து விலகியிருப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது. சூர்யா 45 படத்தின் புதிய இயக்குனர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தின் இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை இளசுகளின் ‘நியூ சென்ஷேன்’ சாய் அபயங்கர் தான். ‘கட்சி சேர’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் LCU படமான ‘பென்ஸ்’ மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில், அடுத்து சூர்யா படத்திற்கு இசையமைக்கவுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version