இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்!

Published

on

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானதுஇ காந்திபூங்காவில் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நா.உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன்இ முன்னாள் நா. உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடியுள்ளனர்.

Advertisement

பின்னர் ஒன்று கூடியவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்வர்களின் புகைகப்படங்கள் மற்றும் கொலைகாரர்களால் நீதி வழங்க முடியுமா? நாங்கள் கேட்பது இழைப்பீடையே மரண சான்றிதழையே அல்ல முறையான நீதி விசாரணையைஇ எமது உரிமை எமது எதிர்காலம் எப்போதுஇ எமது உறவுகள் எங்கேஇ என பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

இதையடுத்துஇ குறித்த ஊர்வலமானது தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்திலிருந்து நகர் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தையடைந்து காந்திபூங்காவை சென்றடைந்து அதனை தொடர்ந்து காந்திபூங்காவில் 11.00 மணிவரை போராட்டத்தை முன்னெடுத்த போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version