சினிமா

கீர்த்தி சுரேஷை காதலித்து பெண் கேட்ட நடிகர் விஷால்!! பயில்வான் கொடுத்த ஷாக்..

Published

on

கீர்த்தி சுரேஷை காதலித்து பெண் கேட்ட நடிகர் விஷால்!! பயில்வான் கொடுத்த ஷாக்..

சண்டைக்கோழி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, திமிரு, தாமிரபரணி உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். சமீபத்தில் மார்க் ஆண்டனி, ரத்னம் போன்ற படங்களில் நடித்தும் இருந்தார்.தற்போது துப்பறிவாளன் 2 படத்திலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கர், நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு சர்ச்சையிலும் சிக்கி வந்தார் விஷால்.தற்போது வரை சிங்கிளாக இருக்கும் விஷால் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில தகவலை பகிர்ந்துள்ளார். சண்டக்கோழி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுடன் விஷால் நடித்தார்.அப்போது கீர்த்தி சுரேஷை விஷாலுக்கு ரொம்பவே பிடித்து போக இயக்குநர் லிங்குசாமி மூலம் கீர்த்தியை பெண் கேட்டு விஷாலின் வீட்டினர் சென்றுள்ளனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டார்கள்.அப்போது கீர்த்தி சுரேஷ் இன்னொருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறிவிட்டார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். தற்போது டிசம்பர் 12 ஆம் தேதி 15 ஆண்டுகால நண்பர் ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version