இந்தியா

கோவில்பட்டி சிறுவன் கொலை! போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Published

on

கோவில்பட்டி சிறுவன் கொலை! போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காணாமல் போன 10 வயது சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் வாய், ஆசனவாய் பகுதிகளில் லேசான காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது இளைய மகன் கருப்பசாமி அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று காலை 9 மணியளவில் சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவரது பாட்டி வந்து பார்த்தபோது சிறுவனைக் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் பக்கத்து வீட்டு மாடியில் மயக்கமடைந்த நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்து பல மணி நேரம் ஆனது தெரியவந்தது. சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் கையில் இருந்த மோதிரம் காணாமல் போனதாகத் தெரிகிறது.

மேலும் சிறுவனின் வாய், உதடு, ஆசனவாய்ப் பகுதிகளில் லேசான காயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகைக்காக சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிறுவனின் உடல், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version