சினிமா

சூர்யாவுடன் மோத ஹீரோவை வில்லன் ஆக்க போட்ட தூண்டில்.. ஆர்ஜே பாலாஜி, விரித்த வலையில் ஹீரோ சிக்குவாரா?

Published

on

சூர்யாவுடன் மோத ஹீரோவை வில்லன் ஆக்க போட்ட தூண்டில்.. ஆர்ஜே பாலாஜி, விரித்த வலையில் ஹீரோ சிக்குவாரா?

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றதா என்றால் அது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஏனென்றால் கங்குவா படத்தை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு மற்ற படங்கள் எல்லாம் வெற்றி பெற்று அதிக வசூலை குவித்து விட்டது.

இதனால் அடுத்து நடிக்க போகும் ஒவ்வொரு படங்களும் வெற்றியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக மெனக்கீடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44வது படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகப்போகிறது.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 45 வது படத்திற்கும் பூஜை போட்டு துவங்கி விட்டார்கள். இதை நடிகர் மற்றும் இயக்குனருமாக அவதரித்து வரும் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பாக சூட்டிங் எல்லாம் நடைபெற்று வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா கமிட்டாகி இருக்கிறார். அத்துடன் ஆர்ஜே பாலாஜி முக்கியமான கேரக்டரில் நடிக்கப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் முக்கியமான வில்லன் கேரக்டரை தேர்வு செய்யும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இப்போதெல்லாம் வருகிற பெரிய படங்களில் ஹீரோவை வில்லனாக நடிக்க வைப்பது தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு வருகிறது. அதே மாதிரி சூர்யாவின் 45 ஆவது படத்திலும் ஒரு ஹீரோவை வில்லனாக மொத்த டீமும் தூண்டில் போட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவுடன் மோதுவதற்கு தகுந்த வில்லனாக விஜய் சேதுபதியை யோசித்து வைத்திருக்கிறார். இதைப்பற்றி மொத்த டீமும் விஜய் சேதுபதியிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி ஏற்கனவே சில படங்களில் வில்லனாக நடித்ததால் அவருடைய ஹீரோ இமேஜ் உடைந்து விட்டது என்று பீல் பண்ணினார்.

Advertisement

அதை சரி செய்யும் விதமாகத்தான் விஜய் சேதுபதி அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா படத்தில் அதிக மெனக்கெடு எடுத்து மிகப்பெரிய வெற்றியை பார்த்திருக்கிறார். அதனால் மறுபடியும் வில்லனாக நடிப்பதற்கு சம்மதிப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏனென்றால் தற்போது ஹீரோவாக கிட்டத்தட்ட நான்கு படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சமயத்தில் சூர்யா மற்றும் rj பாலாஜி விரித்த வலையில் விஜய் சேதுபதி சிக்க மாட்டார் என்பதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version